டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் - தங்கம் வென்றார் ஸ்வெர்வ்

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெர்வ் தங்கப் பதக்கம் வென்றார்.
x
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெர்வ் தங்கப் பதக்கம் வென்றார். ஆடவர் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் கச்சனோவும், ஜெர்மனி வீரர் ஸ்வெர்வும் மோதிக் கொண்டனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வெர்வ் 6-க்கு 3, 6-க்கு 1 என்ற செட் கணக்கில் கச்சனோவை வீழ்த்தி போட்டியில் வெற்றி பெற்றார். இதன்மூலம், ஒலிம்பிக் போட்டிகளில் அவர் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். போட்டியில் தோல்வியடைந்த ரஷ்ய வீரர் கச்சனோவுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்