இந்திய ஒலிம்பிக் கமிட்டிக்கு நிதியுதவிகள் - ரூ.10 கோடி அளிக்கும் பி.சி.சி.ஐ

இந்தியாவின் தேசிய ஒலிம்பிக்ஸ் கமிட்டிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், 10 கோடி ரூபாய் உதவித் தொகை அளித்துள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
இந்திய ஒலிம்பிக் கமிட்டிக்கு நிதியுதவிகள் - ரூ.10 கோடி அளிக்கும் பி.சி.சி.ஐ
x
இந்தியாவின் தேசிய ஒலிம்பிக்ஸ் கமிட்டிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், 10 கோடி ரூபாய் உதவித் தொகை அளித்துள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியா சீனா எல்லைப் பிரச்சனையினால், இரு நாட்டு உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில், பல்வேறு சீன நிறுவனங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஒலிம்பிக் கமிட்டியுடன் லி நிங் என்ற விளையாட்டு வீரர்களுக்கான உடைகள் தயாரிக்கும் சீன நிறுவனம் செய்திருந்த 6 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை இந்த மாதத் தொடக்கத்தில், இந்திய ஒலிம்பிக் கமிட்டி ரத்து செய்தது.

இந்திய ஒலிம்பிக்ஸ் கமிட்டி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம், சீன நிறுவனங்கள், ஒலிம்பிக்ஸ்

அடுத்த மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், இந்திய ஒலிம்பிக் கமிட்டிக்கு 10 கோடி ரூபாய் நிதி உதவியை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ளது. 

இந்த நிதியளிப்பு, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய வீரர்கள் அதிக அளவில் பதக்கங்களை வெல்ல உதவும் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்  நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்திய ஒலிம்பிக் கமிட்டிக்கு, எம்.பி.எல் ஸ்போர்ட்ஸ் பவுன்டேசன் 8 கோடி ரூபாய் அளவுக்கு நிதியளிக்க உள்ளதாக கடந்த வாரம் அறிவித்திருந்தது.

இதே போல ஜே.எஸ்.டபிள்யு குழுமம் 1 கோடி ரூபாயும், அமுல் நிறுவனம் 1 கோடி ரூபாயும் அளிக்க திட்டமிட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்