இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் - 10வது முறையாக ரபேல் நடால் சாம்பியன்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச்சை வீழ்த்தி ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் - 10வது முறையாக ரபேல் நடால் சாம்பியன்
x
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச்சை வீழ்த்தி ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி, ரோம் நகரில் நடைபெற்றது. ஆண்கள்  ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரர் ஜோகோவிச்சும், மூன்றாம் நிலை வீரரான ரபேல் நடாலும் மோதினர். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7க்கு5, 1க்கு6, 6க்கு3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி ரபேல் நடால் சாம்பியன் பட்டத்தை வென்றார். ரபேல் நடால் வெல்லும் 10-வது இத்தாலி ஓபன் டென்னிஸ் பட்டம் இதுவாகும்.


Next Story

மேலும் செய்திகள்