அரையிறுதியில் செரீனா அதிர்ச்சி தோல்வி - செரீனாவை வீழ்த்தி ஒசாகா அசத்தல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து உள்ளார்.
அரையிறுதியில் செரீனா அதிர்ச்சி தோல்வி - செரீனாவை வீழ்த்தி ஒசாகா அசத்தல்
x
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. காலிறுதிப் போட்டிகளைத் தொடர்ந்து, பெண்கள் பிரிவில், முதலாவது அரையிறுதி ஆட்டம் இன்று நடந்தது. அதில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்சும், ஜப்பான் வீராங்கனை நயோமி ஒசாகாவும் மோதிக் கொண்டனர். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், ஒசாகா சிறப்பாக விளையாடினார். இதனால், ஆரம்பம் முதலே நெருக்கடிக்கு உள்ளான செரீனா, 6-க்கு 3, 6-க்கு 4 என்ற செட் கணக்கில், அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.  செரீனாவை வீழ்த்திய, ஒசாகா 2-ஆவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்