"நாளை கங்குலி டிஸ்சார்ஜ்?"- மருத்துவமனை நிர்வாகம்

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாளை கங்குலி டிஸ்சார்ஜ்?- மருத்துவமனை நிர்வாகம்
x
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கங்குலிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் நாளை கங்குலி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ரத்த குழாயில் உள்ள 3 அடைப்புகளில் ஒரு அடைப்பு மற்றுமே சரி செய்யப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் அல்லது வாரங்களில் கங்குலிக்கு அடுத்த கட்ட சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதேநேரம் அமெரிக்க இதய வல்லுநருடன் கலந்து ஆலோசித்து கங்குலிக்கு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்