பெங்களூரு அணியிடம் எப்படி வீழ்ந்த‌து சென்னை...
பதிவு : அக்டோபர் 11, 2020, 04:04 PM
பெங்களூரு அணியிடம் எப்படி வீழ்ந்த‌து சென்னை...
துபாய்ல நடந்த ஐ.பி.எல் 25 வது லீக் ஆட்டத்துல பெங்களூருவ எதிர்கொண்ட சென்னை 37 ரன் வித்தியாசத்துல தோத்துருக்கு... டாஸ் வின் பன்ன பெங்களூரு கேப்டன் கோலி, பேட்டிங் ச்சூஸ் பன்னாரு... புவர் ஃபார்ம்ல இருந்த ஆரோன் பின்ச்ச, 9 பால் Face பன்ன வச்சி, போல்ட கழட்டி விட்டாரு தீபக் சஹார்.. ஆனா இன்னொரு எண்டுல படிக்கல் பொறுமையா ஆட, அவரு கூட பார்ட்னர்ஷிப் போட்டாரு கேப்டன் விராட்... 

அவரு அவுட் ஆன அப்றோ மத்த எல்லாரும் போக்கும் வரத்துமா இருக்க, விராட் மட்டும் அவுட்டே ஆகாம 90 ரன்னு விளாசுனாரு.. இதுல 4 சிக்ஸ், 4 ஃபோர்... 
20 ஓவர் முடியுறப்போ பெங்களூரு டீம், 4 விக்கெட்ஸ் லூஸ் பன்னி 169 ரன்ஸ் அடிச்சிருந்தாங்க... தீபக் சஹார் 3 ஓவர் போட்டு வெறும் 10 ரன்னும், ஜடேஜா 2 ஓவர் போட்டு வெறும் 7 ரன்னு தான் கொடுத்தாங்க... ஆனா அவங்களுக்கு மீதி ஓவர் குடுக்கல... 

ஆனா, ஏற்கனவே அடி தொவச்சி தொங்க விட்டாலும், சாம் கரண், சர்துல் தாகூர் ரெண்டு பேரும் 4 ஓவரும் கம்ப்ளீட் பன்னி, 48, 40னு ரன்ன வாரி வழங்கிட்டு போய்ட்டாங்க... எதுக்கு இவங்களுக்கு ஓவர் குடுத்தாரு.. அவங்களுக்கு கொடுக்கலங்குறது தோனிக்கு மட்டுமே பதில் தெரிஞ்ச மில்லியன் டாலர் கேள்வி... எது எப்டியோ டார்கெட் கம்மி தான... அதுவும் இன்னைக்கி கேதர் ஜாதவ் வேற இல்ல... கண்டிப்பா ஜெயிச்சிருவோம்னு தான் நினைச்சோம்.. 

ஆனா, ஓபனிங் பேட்மேன் டூபிளசிஸ், வாட்சன் 25 ரன்னுக்குள்ளயே காலி ஆய்ட்டாங்க.. ஒரே ஆறுதல் என்ன‌ன்னா... ரெண்டு பேரயும் விக்கெட் எடுத்த‌து நம்ம தமிழக வீர‌ர் வாஷிங்டன் சுந்தர்...அடுத்து வந்த ராயுடு ஒன்டே மேட்ச் ஆடிட்டு இருந்தாரு... முதல் மேட்ச்ல இறங்குற தமிழக வீர‌ர் ஜெகதீசனும் அவருக்கு நல்லாவே பார்ட்னர்ஷிப் குடுத்தாரு.. 

அப்றோ என்ன வழக்கம்போல ப்ரஷர்ல வந்த தோனி 1 சிக்ஸ் அடிச்சி உடனே அவுட் ஆய்ட்டாரு... அப்றோ தான் டீம் நிலம தெரியுமே... வந்த வேகத்துல எல்லாரும் போய்ட்டே இருந்தாங்க.. 20 ஓவர் முடியுறப்போ, 8 விக்கெட்ட லூஸ் பன்னிருந்த சென்னை டீம் 132 ரன்னு அடிச்சிருந்துச்சி... மொத்த‌த்துல 37 ரன் வித்தியாசத்துல தோத்துருச்சி சென்னை.... 

போட்டிக்கு முன்னாடியே இன்னும் 8 போட்டில 6 மேட்ச் ஜெயிச்சே ஆகனும்னு சொல்லிருந்தோம்... அத நம்ம சிஎஸ்கே,  ஓ...  அப்போ இன்னும் 2 மேட்ச் தோக்கலாமா அப்டிங்குற அங்கிள்ல யோசிச்சிட்டாங்க போல...இன்னும் ஒரு தோல்வி பாக்கி இருக்கு... 6 வெற்றி பாக்கி இருக்கு... காத்திருப்போம்... 

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

606 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

102 views

தேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்

பிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

22 views

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.

19 views

பிற செய்திகள்

பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் - வீணான கெயிலின் அதிரடி ஆட்டம்

அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 50ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.

2653 views

"கொரோனா பரப்பும் செயலில் அதிபர் டிரம்ப்" - டிரம்ப் பேரணி குறித்து ஜோ பிடன் கடும் விமர்சனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்தும் பேரணி மூலம் அதிக அளவில் கொரோனா பரவுவதாக ஜோ பிடன் குற்றம் சாட்டியுள்ளார்.

9 views

வியன்னா ஓபன் டென்னிஸ் - டிமிடிரோவ் கால் இறுதிக்கு தகுதி

வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டியில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமிட்ரோவ், பிரபல கிரேக்க வீரர் ஸ்டேபானஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார்.

14 views

கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை அணி - இறுதி பந்தில் திரில் வெற்றி

ஐ.பி.எல் 49 வது ஆட்டத்தில் கொல்கத்தாவை எதிர்கொண்ட சென்னை அணி, இறுதி பந்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.

55 views

மனைவியுடன் சைகை மொழி பேச்சு - கோலி மகிழ்ச்சி

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சைகை மொழியில் பேசும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

1716 views

வியன்னா ஓபன் டென்னிஸ் - ஜோகோவிக் அசத்தல் வெற்றி

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிக் குரேஷியாவின் போர்னா கோரிக்கை எதிர்கொண்டார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.