"வந்துட்டோம்னு சொல்லு" - சொல்லி அடித்த சென்னை அணி
பதிவு : அக்டோபர் 05, 2020, 12:50 PM
சென்னை அணி அவ்வளவுதான் என கொக்கரித்த பலருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் தரமான வெற்றியை பதிவு செய்துள்ளது, சிஎஸ்கே...
ஹாட்ரிக் தோல்வி...  மாற்று வீரர்கள் இல்லை... சென்னை அணி இனி அவ்வளவுதான் என்று ஏளனம் செய்து கொண்டிருந்தவர்களுக்கும், வேதனையில் இருந்த சென்னை அணி ரசிகர்களுக்கும் தாங்கள் ஃபாமிற்கு வந்தால் என்னவாகும் என காட்டி யிருக்கிறது, சென்னை அணி...

துபாய் மைதானத்தில் ஐபிஎல் 18 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்பை எதிர்கொண்ட பஞ்சாப் அணி டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது... அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்கம் சிறப்பாகவே அமைந்தது... அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல், பொறுப்பாக விளையாடி 63 ரன்கள் எடுத்தார்... அடுத்து வந்த வீரர்களும் தங்கள் பங்கிற்கு ஓரளவு ரன் எடுத்ததால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது...சென்னை அணி சார்பில் தாகூர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்..


இதைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியின் வாட்சனும் டூப்ளசிஸ் , வழக்கத்துக்கு மாறான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்....குறிப்பாக கடந்த போட்டிகளில் விக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் ஆடிய வாட்சன் இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார்...அதேபோல டூப்ளசிஸ் தன் வழக்கமான பாணியில் ரன் குவிப்பில் ஈடுபட்டார்... இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பவுண்டரிகள் விளாசவே அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பஞ்சாப் அணி பந்து வீச்சாளர்கள் திணறினர்.கடந்த போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக பந்துவீசிய தமிழக வீரர் முருகன் அஸ்வின் இந்த போட்டியில் பங்கேற்காதது அந்த அணிக்கு  பின்னடைவாக பார்க்கப்படுகிறது..

முடிவில் சென்னை அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. 
டூப்ளசிஸ் 87 ரன்கள் வாட்சன் 83 ரன்கள் என ஆட்டமிழக்காமல் பஞ்சாபின் ஆட்டத்தை முடித்தனர்... இவர்களது partnership score 181 ஐபிஎல் வரலாற்றில் இது இரண்டாவது சிறந்த ஓபனிங் பார்ட்னர்ஷிப் ஆக பார்க்கப்படுகிறது.... இதற்குமுன் கௌதம் கம்பீர் மற்றும் கிறிஸ் லின் ஆகியோர் 184 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்துள்ளனர்.மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால்  இருவரும் தலா 53 பந்துகளை சந்தித்தனர்... இருவரும் 11 four அடித்தனர்...  இருவருக்குள்ளும் ஒற்றுமைக்கு இதுவும் எதிர்பாராத சான்றுகள்... 

வெற்றி குறித்து பேசிய தோனி, வாட்சன் நல்ல ஃபார்மில் இருப்பதை வலைப் பயிற்சியின்போது கண்டதாகவும்... அதனால் மீண்டும் வாய்ப்பளித்த தாகவும் கூறினார்...இதேபோல ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட வாட்சன் பேசும்போது, அனுபவம் வாய்ந்த டூப்ளசிஸ் தன்னை வழிநடத்தி சென்றதாகவும், தன் மீது நம்பிக்கை வைத்த அணி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.இந்த வெற்றி மூலம் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது...

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

606 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

102 views

தேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்

பிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

22 views

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.

19 views

பிற செய்திகள்

பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் - வீணான கெயிலின் அதிரடி ஆட்டம்

அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 50ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.

2657 views

"கொரோனா பரப்பும் செயலில் அதிபர் டிரம்ப்" - டிரம்ப் பேரணி குறித்து ஜோ பிடன் கடும் விமர்சனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்தும் பேரணி மூலம் அதிக அளவில் கொரோனா பரவுவதாக ஜோ பிடன் குற்றம் சாட்டியுள்ளார்.

9 views

வியன்னா ஓபன் டென்னிஸ் - டிமிடிரோவ் கால் இறுதிக்கு தகுதி

வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டியில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமிட்ரோவ், பிரபல கிரேக்க வீரர் ஸ்டேபானஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார்.

14 views

கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை அணி - இறுதி பந்தில் திரில் வெற்றி

ஐ.பி.எல் 49 வது ஆட்டத்தில் கொல்கத்தாவை எதிர்கொண்ட சென்னை அணி, இறுதி பந்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.

55 views

மனைவியுடன் சைகை மொழி பேச்சு - கோலி மகிழ்ச்சி

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சைகை மொழியில் பேசும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

1716 views

வியன்னா ஓபன் டென்னிஸ் - ஜோகோவிக் அசத்தல் வெற்றி

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிக் குரேஷியாவின் போர்னா கோரிக்கை எதிர்கொண்டார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.