ஐ.பி.எல். ரத்தானால் கிரிக்கெட்டிற்கு தோனி முழுக்கு? - போட்டி ரத்தானால் அடுத்து என்ன செய்வார் தோனி?

கொரோனா காரணமாக, ஐ.பி.எல். போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறாவிட்டால், கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல். ரத்தானால்  கிரிக்கெட்டிற்கு தோனி முழுக்கு? - போட்டி ரத்தானால் அடுத்து என்ன செய்வார் தோனி?
x
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் கடைசியாக இந்திய அணிக்காக விளையாடினார். 

அதன் பிறகு எந்த விதமான கிரிக்கெட் போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியிலும் தோனியின் பெயர் பரீசிலிக்கப்படவில்லை. இதை, அப்போதைய தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் வெளிப்படையாகவே கூறினார்.

இந்நிலையில்,  வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில்  டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளதால், இருபது ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் களமிறங்க திட்டமிட்டார். 
அதற்காக, தமது திறமையை மீண்டும் நிருபிக்க ஐ.பி.எல். தொடரை வாய்ப்பாக பயன்படுத்தவும் தோனி முடிவு எடுத்தார். சென்னை அணிக்கு கோப்பையை வென்று தந்தால், டி 20 அணியில் இடம் பிடிக்கலாம் என திட்டமிட்டதோடு, ஒரு மாதம் முன்பே சென்னை வந்த அவர், ரெய்னா உள்ளிட்ட வீரர்களுடன் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.

ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டதோடு, இம்முறை ஐ.பி.எல். போட்டி நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால், இந்திய அணிக்கு திரும்புவதற்காக தோனி வகுத்த திட்டத்துக்கு அபாய நிலை ஏற்பட்டுள்ளது. 
ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறாவிட்டால், மீண்டும் ஜார்கண்ட் அணிக்காக ஒரு நாள் போட்டியில் விளையாட வேண்டிய நிலைமை ஏற்படும்.  இந்த ஆண்டு இந்திய அணி டி 20 போட்டிகளிலேயே அதிகமாக விளையாட உள்ளதால், ஐ.பி.எல். தொடரை குறி வைத்து தோனி நகர்த்திய காய், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விரைவிலேயே கிரிக்கெட்டிற்கு தோனி முழுக்கு போடலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்