நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி : இந்திய அணி தடுமாற்றம்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி : இந்திய அணி தடுமாற்றம்
x
வெலிங்டனில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா, அதிரடியாக விளையாட முற்பட்டு 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அனுபவ வீரர் புஜாரா 11 ரன்களில் வெளியேற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கடுமையாக போராடிய மாயங் அகர்வால் 34 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.  இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்து தடுமாறிய நிலையில், மழை வந்து காப்பாற்றியது. இதனால் முதல் நாள் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. ரஹானே 38 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்