டேவிஸ் கோப்பை டென்னிஸ் : இந்தியா அபார வெற்றி

கஜகஸ்தான் நாட்டின் நூர் சுல்தான் நகரில் நடைபெற்று வரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், இந்திய வீரர்கள் அபாரமாக வெற்றி பெற்றனர்.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் : இந்தியா அபார வெற்றி
x
கஜகஸ்தான் நாட்டின் நூர் சுல்தான் நகரில் நடைபெற்று வரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், இந்திய வீரர்கள் அபாரமாக வெற்றி பெற்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், பாகிஸ்தான் வீரர் முகமது சோயிப்பை, 6 க்கு பூஜ்யம், 6 க்கு பூஜ்யம் என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். மற்றொரு போட்டியில், இந்தியாவின் சுமித் நாகல், பாகிஸ்தான் வீரர் ஹூசைபா அப்துல் ரஹ்மானை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் - 45 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் சுமித் நாகல், 6 க்கு பூஜ்யம், 6க்கு 2 என்ற நேர் செட் கணக்கில், வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்தியா, 2 க்கு பூஜ்யம் என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்