"குற்றங்கள் நேர்ந்தால் சமரசமே இல்லை" - தலைவராக பொறுப்பேற்ற பின் கங்குலி சூளுரை

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
குற்றங்கள் நேர்ந்தால் சமரசமே இல்லை - தலைவராக பொறுப்பேற்ற பின் கங்குலி சூளுரை
x
மும்பையில் பிசிசிஐ ஆண்டு பொதுகூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பதவியேற்று கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அனைத்து வகையிலும் பிசிசிஐ உதவியாக இருக்கும் என்று உறுதி அளித்தார். இதேபோல, தோனியை போன்ற வீர‌ர் கிடைக்க இந்தியா பெருமை கொள்ள வேண்டும் என்று கூறிய கங்குலி, அவரது ஓய்வு குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கங்குலி அணிந்திருந்த உடை தளர்வாக இருந்த‌து குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, இது நான் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற போது அணிந்த உடை என கங்குலி தன் நெகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இதை தொடர்ந்து பேசிய கங்குலி,  வரும் காலங்களில், ஊழல், லஞ்சம் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சமர‌சமே பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்