அமெரிக்க ஓபன் - ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின், ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்க ஓபன் - ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்
x
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின், ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். நியூயார்க்கில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவை எதிர்கொண்ட ரபேல் நடால், முதல் இரு செட்களை கைப்பற்றிய நிலையில், அடுத்த இரண்டு செட்களையும் மெட்வடேவ் கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார். 4 மணி 50 நிமிடங்கள் நேரம் நீடித்த இந்த போட்டியில் நடால் 7க்கு - 5, 6க்கு -3, 5க்கு - 7, 4க்கு - 6, மற்றும் 6க்கு- 4  என்ற செட் கணக்கில் மெட்வடேவை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ரபேல் நடால், தனது 19 ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்