ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி
x
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட்  போட்டியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. சவுதம்டனில் நடைபெற்ற இப்போட்டியில்,  டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய  வங்காளதேச அணி  நிர்ணயிக்கப்பட்ட  50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்தது. 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 47 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் வங்கதேச அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்