இந்தியா Vs பாகிஸ்தான் - சுவாரஸ்ய நிகழ்வுகள்
பாகிஸ்தான், இந்திய அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் சில சுவாரஸ்ய சம்பவங்கள் நிகழ்ந்தன. அதை தற்போது பார்க்கலாம்..
இந்திய அணியில், அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 2ஆவது வீரர் என்ற மைல்கல்லை முன்னாள் கேப்டன் தோனி பெற்றுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை சேர்த்து இதுவரை 341 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, இரண்டாவது இடத்தில் இருந்த ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இதுவரை மோதிய உலககோப்பை போட்டிகளில், அதிகபட்ச ரன்களை குவித்தவர் என்ற சாதனையை, ரோகித் சர்மா படைத்துள்ளார். மான்செஸ்டரில் நடந்த போட்டியில் 140 ரன்களை குவித்ததன் மூலம், 2015 ஆம் ஆண்டில் அடிலெய்டில் நடந்த போட்டியில் கோலி 107 ரன்கள் அடித்த சாதனையை, ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.
உலக கோப்பை போட்டிகளில் மோதிய ஏழு போட்டிகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ள இந்தியா, இலங்கை அணியை பாகிஸ்தான் ஏழு முறை வென்ற சாதனையை சமன் செய்துள்ளது.
இந்த போட்டியில் 77 ரன்கள் எடுத்த கேப்டன் விராட் கோலி அதிவேகமாக பதினோராயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் 276 இன்னிங்சில் அடித்த ரன்களை, கோலி 222 இன்னிங்சில் கடந்து, அவரது சாதனையை முறியடித்துள்ளார்.
Next Story