இறகுபந்து லீக் போட்டிக்கான அறிமுக விழா : அன்புமணி ராமதாஸ், நடிகர் பரத் பங்கேற்பு

தமிழக அளவில் இறகுபந்து விளையாட்டுக்கான லீக் போட்டிகள் வரும் ஜூன் நான்காம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.
இறகுபந்து லீக் போட்டிக்கான அறிமுக விழா : அன்புமணி ராமதாஸ், நடிகர் பரத் பங்கேற்பு
x
சென்னை, திருப்பூர், திருச்சி,  கோவை, கரூர் உள்ளிட்ட 8 அணிகள் போட்டியிடுகின்றனர். இதற்கான அறிமுக விழா சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழ்நாடு இறகுபந்து கழகத்தின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகளாக திரைப்பட நடிகர் பரத், மோட்டார் சைக்கிள் வீராங்கனை ஆயிஷா அப்துல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி, இறகுபந்து வெறும் விளையாட்டு மட்டும் இல்லை என்றும் அது ஆரோக்கியமும் சம்பந்தப்பட்டது என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்