மும்பை அணி 4-வது வெற்றி

ஐபிஎல் தொடரின் 24-வது லீக் போட்டி மும்பை வான்கதே மைதானத்தில் நடைபெற்றது.
மும்பை அணி 4-வது வெற்றி
x
ஐபிஎல் தொடரின் 24 வது லீக் போட்டி மும்பை வான்கதே மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கிங்ஸ் 11 பஞ்சாப் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 197 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 64 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். இது அவர் ஐபிஎல் போட்டியில் அடித்த முதல் சதம் ஆகும். பின்னர் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை அணி கேப்டன் பொல்லார்டின் அதிரடியால் வெற்றி பெற்றது. 31 பந்துகளில் 83 ரன்கள் அடித்த பொல்லார்ட் ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார். இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஜெய்பூரில் மோதுகின்றன.

Next Story

மேலும் செய்திகள்