கோலி Vs ரோஹித் - யாருக்கு வெற்றி?

ஐ.பி.எல். இன்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதுகின்றன
கோலி Vs ரோஹித் - யாருக்கு வெற்றி?
x
ஐ.பி.எல். இன்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி பெங்களூருவில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ரன் குவித்து நல்ல தொடக்கத்தை அளித்தால் மட்டுமே மும்பை அணி வெற்றி பெற முடியும்.ஆல் ரவுண்டராக இடம்பெற்றுள்ள ஹர்திக் பாண்டியா டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங், மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சோபிக்கத் தவறியதால், அவருக்கு இன்றைய ஆட்டத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.கேப்டன் விராட் கோலியை நம்பியே பெங்களூரு அணி உள்ளது.முதல் ஆட்டத்தில் கோலி 6 ரன்கள் மட்டுமே எடுத்ததால், இன்றைய போட்டியில் அவர் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது அதிரடி வீரர் டிவில்லியர்சும் முதல் போட்டியில் சோபிக்க தவறியதால், அவரும் ரன் குவிக்க வேண்டிய உத்வேத்துடன் உள்ளார். இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் மும்பை அணி 16 முறையும், பெங்களூரு அணி 9 முறையும் வென்றுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்