கிரிக்கெட் : ஒரே ஓவரில் 43 ரன்கள் குவித்து உலக சாதனை

நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் 43 ரன்கள் குவிக்கப்பட்டு உலக சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் : ஒரே ஓவரில் 43 ரன்கள் குவித்து உலக சாதனை
x
நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் 43 ரன்கள் குவிக்கப்பட்டு உலக சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட அணிகள் மோதிய இந்த போட்டியில், மத்திய மாவட்ட அணி வீர‌ர் வில்லியம் லூடிக், ஒரே ஓவரில் இரண்டு நோ பால்கள் வீசியுள்ளார். இதனை சரியாக பயன்படுத்திகொண்ட வடக்கு மாவட்ட வீர‌ர்கள், பிரெட் ஹாம்ப்டன் மற்றும் ஜோ கார்ட்டர் ஜோடி ஒரு பவுண்டரி மற்றும் ஆறு சிக்சர்கள் பறக்க விட்டு 43 ரன்கள் குவித்துள்ளனர். ஒரே ஓவரில் 39 ரன்கள் எடுத்த‌தே உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்