"அதிமுக முடியாதுனு சொன்ன திட்டம்..! இன்று முதல்வர் நிறைவேற்றி இருக்கிறார்"

x

அதிமுகவினர் செய்யவே முடியாதுன்னு சொன்ன கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்தி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல்லில் நடந்த திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், அதிமுகவினர் செய்யவே முடியாதுன்னு சொன்ன திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என்றார். இந்த திட்டத்தில் 1 கோடியே 18 லட்சம் மகளிர் இதுவரை பயனடைந்து வருகிறார்கள் என்றும் கூறினார். நமது அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் ரெய்டு விடுகிறார்கள் என்று கூறிய அவர், நீங்கள் எத்தனை ரெய்டு வேண்டுமானாலும் விடுங்கள், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவும் பாஜகவுக்கு ரெய்டு விடப்போவது நிச்சயம் என்றும் பேசினார்


Next Story

மேலும் செய்திகள்