சசிகலா விட்ட போயஸ்கார்டன் அம்பு...ஈபிஎஸ் எதிர்பாராத அதிர்ச்சி மூவ் - சைலண்டாக காய் நகர்த்தும் VKS

x

#Sasikala | #edappadipalanisamy | #AIADMK

சசிகலா விட்ட போயஸ்கார்டன் அம்பு...ஈபிஎஸ் எதிர்பாராத அதிர்ச்சி மூவ் - சைலண்டாக காய் நகர்த்தும் VKS

அதிமுக தொண்டர்களுக்கு படிவம் ஒன்றை வெளியிட்டுள்ள சசிகலா, அதனை பூர்த்தி செய்து அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிந்து அவ்வப்போது செய்தியாளர்களை சந்திக்கும் சசிகலா அதிமுகவை தாம் ஒன்றிணைக்கப்போவதாக தொடர்ந்து சொல்லி வருகிறார். இந்நிலையில் அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா படிவம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த படிவத்தில் அதிமுக தொண்டரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, வயது, ஆதார் எண், கல்வி தகுதி, அதிமுகவில் இணைந்த ஆண்டு, கட்சியில்

வகித்த பதவி உள்ளிட்ட பல விவரங்களை

பூர்த்தி செய்ய வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

பூர்த்தி செய்த படிவங்களை அதிமுக தொண்டர்கள், சென்னை போயஸ் கார்டனில் சசிகலா வசிக்கும் இல்லமான ஜெ ஜெயலலிதா இல்லம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம் என்றும் சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்