முதல்வர் தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டம்

x

முதல்வர் தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டம்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் 3-ம் தேதி தொடங்கப்பட்டு, 2024 ஜூன் மாதம் வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு,தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் கட்சி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்துவது தொடர்பாக நிர்வாகிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவின் அமைச்சர்கள், திமுகவின் 23 அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்