நட்சத்திர வேட்பாளர்கள் சொத்து விபரம்... 2019-ல் எவ்வளவு? 2024-ல் எவ்வளவு? -அன்றும்... இன்றும்...!

x

திருநெல்வேலியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், 24 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். இதுவே 2019-ல் ராமநாதபுரத்தில் போட்டியிட்ட போது 19 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு 45 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுவே 2019 வேட்புமனுவில் 20 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தனக்கு 96 கோடியே 25 லட்சம் ரூபாய் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுவே கடந்த தேர்தலில் போட்டியிட்ட போது 79 கோடியே 34 லட்சம் ரூபாய்க்கு சொத்து இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்கும் பொன். ராதா கிருஷ்ணன், 7 கோடியே 63 லட்சம் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுவே 2019 தேர்தலில் போட்டியிட்ட போது 7 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

வேலூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், 86 கோடியே 94 லட்சம் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுவே 2019 தேர்தலில் போட்டியிட்ட போது 58 கோடியே 75 லட்சம் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

வேலூரில் பா.ஜ.க வேட்பாளராக களமிறங்கியுள்ள புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் 152 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். வேலூரில் கடந்த முறை போட்டியிட்ட போது 127 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

நீலகிரி தொகுதியில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுவே, 2021 சட்டப்பேரவை தேர்தலில் தாராபுரத்தில் போட்டியிட்ட போது 2 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்