கார்த்தி சிதம்பரத்திற்கு காங். எதிர்ப்பு - மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் திடீர் பரபரப்பு

x

காரைக்குடியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் அருள்பெத்தையா, காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும், சிவகங்கை தொகுதிக்கு கார்த்தி சிதம்பரத்தையே வேட்பாளராக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சிவகங்கை காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினர் கார்த்தி சிதம்பரம் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மற்றொரு தரப்பினர் ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்