"எங்களுக்கு கொடுத்துப் பழக்கம்... ஆனால் திமுகவுக்கு.." - கொந்தளித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா

x

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையா புதுக்கோட்டை நகரத்தில் 42 வார்டுகளிலும் பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... அவருடன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் சென்று ஆதரவு திரட்டினர்... பிரச்சாரத்தின் போது ஒலிபரப்பப்பட்ட மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பாடல்களுக்கு அதிமுக மற்றும் தேமுதிக தொண்டர்கள் உற்சாக நடனமாடினர்... தொண்டர்கள் மத்தியில் பேசிய அதிமுக வேட்பாளர் கருப்பையா புதுக்கோட்டை மட்டுமல்லாது தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் அடிப்படைத் தேவைகளை செய்து கொடுத்தது அதிமுக அரசுதான் என்று குறிப்பிட்டார்... மேலும், அதிமுகவிற்குக் கொடுத்துப் பழக்கம் ஆனால் திமுகவிற்கு எடுத்து தான் பழக்கம் என்று கருப்பையா கடுமையாக விமர்சித்தார்...


Next Story

மேலும் செய்திகள்