2,00,000 டூ 2,500ஆக குறைந்த ஃபாலோவர்ஸ்... ட்விட்டர் மீது ராகுல் காந்தி சாடல்

தன்னுடைய ட்விட்டர் ஃபாலோவர்ஸ் குறைய மத்திய அரசு காரணம் என்றும் அதற்கு ட்விட்டர் துணைபுரிவதாகவும் ராகுல் காந்தி சாடல்
x
இந்தியாவில் சர்வாதிகாரம் அதிகரிக்க ட்விட்டர் உடந்தையாக இருந்துவிடக்கூடாது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேட்டு கொண்டுள்ளார். 

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலுக்கு ராகுல் காந்தி கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். 

அதில் மத்திய அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாக தனது குரலை ஒடுக்க,   ட்விட்டரில் தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

இதற்கு முன்பு மாதம் புதிதாக 2 லட்சம் ஃபாலோவர்ஸ் என இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு வெறும் இரண்டாயிரத்து 500 பேர் தான் தம்மை பின் தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார். 

கடந்த ஆகஸ்ட் மாதம், டெல்லியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் குடும்ப புகைப்படத்தை தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்த காரணத்திற்காக ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இந்தியாவில் சர்வாதிகாரத்தனம் அதிகரிக்க டிவிட்டர் உடந்தையாக இருந்துவிடக்கூடாது என ராகுல் காந்தி கேட்டு கொண்டுள்ளார்.

ராகுலின் இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள ட்விட்டர் நிறுவனம்,  ட்விட்டர் தளத்தில் ஃபாலோவர்ஸின் கணக்கு குறித்த விவரங்கள் வெளிப்படையாக இருப்பதாகவும்,  ஃபாலோவர்ஸின் எண்ணிக்கையில் ஏற்றம், இறக்கம் இருக்கலாம் எனவும் அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்