தேர்தல் பார்வையாளர்கள் கழுகு பார்வையுடன் செயல்பட வேண்டும் - தலைமை தேர்தல் ஆணையர்
பதிவு : ஜனவரி 15, 2022, 09:40 AM
சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் மற்றும் வெறுப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுவதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர்களாக பணியமர்த்தப்பட உள்ளவர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா வலியுறுத்தியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் மற்றும் வெறுப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுவதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர்களாக பணியமர்த்தப்பட உள்ளவர்களுக்கு  தலைமை தேர்தல் 
ஆணையர் சுஷில் சந்திரா வலியுறுத்தியுள்ளார். உத்தர பிரதேசம் , உத்தரகாண்ட் , மணிப்பூர்,  கோவா,  பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தேர்தல் பார்வையாளர்களாக பணியமர்த்தப்பட உள்ள ஐஏஎஸ்,  ஐபிஎஸ் உள்ளிட்ட  அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆய்வு கூட்டம் நடத்தியது. இந்த ஆய்வு கூட்டத்தில் சுமார் 1400 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய 
தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா நேர்மையான, வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் சுதந்திரமான தேர்தலை உறுதி செய்வதில் தேர்தல் பார்வையாளர்கள் கழுகுப் பார்வையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.கொரோனா நோயாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு  தபால் வாக்குகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் தெரிந்து வைத்திருக்கும்படி தேர்தல் பார்வையாளர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினார்.வாக்குப்பதிவு மையங்களில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள்,  பெண்கள் உள்ளிட்டோருக்கு குறைந்தபட்ச வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வாக்குச்சாவடி மையங்களுக்கு அடிக்கடி நேரில் சென்று ஆய்வு செய்யும்படியும் தலைமை தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினர்.தேர்தல் பார்வையாளர்கள் அதிக விழிப்புடன் இருக்கும்படியும் எந்த விதமான முக்கிய நிகழ்வுகளை ஏற்பட்டாலும் அதனை உடனுக்குடன் தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்துமாறு தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கேட்டு கொண்டார்





தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

500 views

"முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு" - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

28 views

இரு தரப்பினர் இடையே விரோதம்... 1000 போலீசாரின் பாதுகாப்பில் நடக்கும் விளையாட்டு

சங்கரன்கோவிலில் இருதரப்பினரிடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில், விளையாட்டு போட்டி நடத்துவதற்காக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..

10 views

பிற செய்திகள்

"கிறிஸ்துவ பள்ளிகளில் மதமாற்றம் செய்வதில்லை" - கார்த்தி சிதம்பரம் (நாடாளுமன்ற உறுப்பினர்)

கிறிஸ்துவ பள்ளிகளில் கட்டாய மதமாற்றம் செய்வதில்லையென தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், தஞ்சை மாணவி விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

8 views

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

14 views

"மாணவியின் வாக்குமூலத்தை தனியார் அமைப்பு பதிவு செய்தது தவறு"

தஞ்சை மாணவி உயிரிழப்பு உணர்ச்சிகரமான ஒன்று என கூறியுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், விசாரணை மூலம் தவறு செய்தது யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

27 views

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் என புகார் உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு

பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் 500 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக கூறி, சிபிஐ விசாரணை கோரி, அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

19 views

#BREAKING || நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - நீதிமன்றம் கருத்து

"நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி உச்ச நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும்" - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

25 views

BREAKING || பஞ்சாப் தேர்தல் - பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு அறிவிப்பு

பஞ்சாபில் சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக கூட்டணியின் தொகுதி பங்கீடு அறிவிப்பு

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.