"வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான புதிய துறை திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும்" - ஸ்டாலின்

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு, தமிழகத்தில் புதிய துறை, திமுக ஆட்சியில் உருவாக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான புதிய துறை திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் - ஸ்டாலின்
x
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான நாளான இன்று, திமுக சார்பில் வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி, பணியைத் தொடங்குவதாக, ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
 
திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் பொறியியல் மற்றும் மருத்துவம் படித்த தமிழர்கள், உலகின் பல பகுதிகளில் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ள அவர்.... 

அவர்களை ஒருங்கிணைத்து, அவர்களது உரிமைகள் மற்றும் நலன்கள் குறித்து இந்திய வெளியுறவுத் தூதரகங்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல, திமுக வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

இந்த அணியின் செயலாளராக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜாவும், இணைச் செயலாளர்களாக எம்.பி. செந்தில்குமார், புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக, தமிழகத்தில் புதிய துறை உருவாக்கப்படும் என்ற கருணாநிதியின் தேர்தல் வாக்குறுதி திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்