"மாநிலங்கள் ரூ.20 லட்சம் கோடி நிதி தர வேண்டும்" - நிதின் கட்கரி

கொரோனா ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் எதிர்மறை வளர்ச்சிக்கு சென்றுள்ள நிலையில், அதனை மீட்டு எடுக்க மத்திய அமைச்சர் நிதின்கட்கரி புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.
மாநிலங்கள் ரூ.20 லட்சம் கோடி நிதி தர வேண்டும் - நிதின் கட்கரி
x
தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், பொருளாதாரத்தை பழைய நிலைக்கு கொண்டு வர அதிக அளவு பணம் தேவைப்படுவதாக தெரிவித்தார். இதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் 20 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டித் தர முன்வர வேண்டும் என்றும், பொது மக்கள் மற்றும் தனியார் பங்களிப்பாக 10 லட்சம் கோடி ரூபாய் திரட்டி மத்திய அரசிடம் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த 30 லட்சம் கோடி ரூபாய் உடன், மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாயும் சேர்த்து நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை துரிதப்படுத்த முடியும் என்றும் நிதின்கட்கரி யோசனை தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 2 ஆண்டுகளில் 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நெடுஞ்சாலைகளை அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்