புதுச்சேரியில் சிறப்பு சட்டப் பேரவை கூட்டம் - குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
x
புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது. முன்னதாக மறைந்த சட்டப்பேரவை உறுப்பினருக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அரசு சார்பில் தீர்மானம், காரைக்காலை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தை அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணித்த நிலையில், பாஜகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

இதையடுத்து, குடியுரிமை சட்டத்துக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே, சட்டப்பேரவையில் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக தீர்மானமாகவோ, விவாதிக்கவோ அனுமதிக்க இயலாது என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் அனுப்பி இருந்த நிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்