"விபிஎன் சேவை நல்ல செயல்களுக்கு பயன்படுகிறது" - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதில்

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன், குழந்தை ஆபாச படங்களை வெளியிடும் பல இணையதளங்களை அரசு தடை செய்திருப்பது பாராட்டுக்கு உரியது என்றார்.
விபிஎன் சேவை நல்ல செயல்களுக்கு பயன்படுகிறது - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதில்
x
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன், குழந்தை ஆபாச படங்களை வெளியிடும் பல இணையதளங்களை அரசு தடை செய்திருப்பது பாராட்டுக்கு உரியது என்றார். ஆனாலும், சிறுவர் ஆபாச படங்களை, விபிஎன் சேவை மூலம் பார்க்கப்படுவதால், அதனை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், குழந்தை ஆபாச படங்களை பொறுத்தவரை அது மிகக் கடுமையாக கையாளப்பட வேண்டும் என்றும், ஆனால் அதே சமயம் அடல்ட் ஆபாச படங்களைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் வீட்டில் அமர்ந்து பார்ப்பது தன்னுடைய உரிமை என்கிற கருத்து பரவலாக நிலவுகிறது என்றும் குறிப்பிட்டார். விபிஎன் மூலமாக பல நல்ல செயல்களும் நடைபெறுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்