தலைநகர் விவகாரம் - ஆந்திராவில் வன்முறை

ஆந்திர தலைநகரை அமராவதியில் இருந்து மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இதில் ஒரு சில இடங்களில் வன்முறை நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
x
ஆந்திராவின் தலைநகரை விசாகப்பட்டினத்துக்கு மாற்ற முடிவு அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். இதற்கான மசோதா ஆந்திர சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதற்காக அமராவதி அருகே முகாமிட்ட, தெலுங்கு தேசம் கட்சியினரை, போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். ஒரு சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், வன்முறை நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்