"நீட் தேர்வில் விலக்கு அளிக்க இயலாது" - தி.மு.க எம்.பி கேள்விக்கு அமைச்சர் பதில்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க இயலாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எழுத்துப்பூர்வ விளக்கம் அளித்துள்ளார்.
நீட் தேர்வில் விலக்கு அளிக்க இயலாது - தி.மு.க எம்.பி கேள்விக்கு அமைச்சர் பதில்
x
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்றைய தினம், மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்குமா என கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்து மத்திய சுகாதாரத்துறை ஹர்ஷ்வர்தன், நீட் தேர்வை விலக்க கோரும் தமிழகம், புதுச்சேரி அரசுகளின் கோரிக்கைகளை ஏற்க இயலவில்லை என்றார். இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956ன் படி அனைத்து மாநிலங்களுக்கும் நீட் தேர்வு பொருந்தும் எனவும் அவர் விளக்கம் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்