மாநிலங்களவையில் குடியுரிமை மசோதா மீது விவாதம் "இஸ்லாமியர்கள் அச்சப்படத் தேவையில்லை" - அமித்ஷா

நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை அளிக்க முடியுமா என உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநிலங்களவையில் குடியுரிமை மசோதா மீது விவாதம் இஸ்லாமியர்கள் அச்சப்படத் தேவையில்லை - அமித்ஷா
x
நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை அளிக்க முடியுமா என உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா 2019- ஐ தாக்கல் செய்து பேசிய அமித்ஷா,  பாகிஸ்தான், வங்க தேசத்தில் 20 சதவீதம் அளவுக்கு சிறுபான்மையினர் குறைந்து உள்ளதாக தெரிவித்தார். அவர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் அல்லது இந்தியாவுக்கு அகதிகளாக வந்திருக்கலாம் எனவும் அமித்ஷா தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதியில் அளித்ததை நிறைவேற்றும் வகையில், இன்று குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு சட்ட வடிவம் கொடுத்து வருகிறோம் என அமித்ஷா கூறினார். 

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனில் இருந்து வரும் மதச் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றும், நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு அநீதி இழைக்கப்படாது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்தார். அதேநேரத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை  வழங்க இயலாது என்றும் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்தார். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான மசோதா இது என்று திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்யப்பட்டு வருவதாகவும், அதற்கு உடன்பட வேண்டாம் என இஸ்லாமியர்களை அமித்ஷா கேட்டுக் கொண்டார். அரசியல் அமைப்பு சட்டப்படி தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாகவும், சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் அமித்ஷா தெரிவித்தார். இந்த மசோதா பழங்குடியினர் மற்றும் மிசோரத்துக்கு பொருந்தாது என்றும் அவர் விளக்கம் அளித்தார். மேலும், அசாம் பூர்வகுடிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என அமித்ஷா உறுதி அளித்துள்ளார். இந்த மசோதா குறித்து இஸ்லாமியர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், யாரும் உங்களை அச்சுறுத்த நினைத்தால், அதற்கு உடன்பட வேண்டாம் என்றும் அமித்ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்