ஜார்கண்ட் தேர்தல் - முதல்கட்ட வாக்குப்பதிவு

ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக நடைபெற்ற தேர்தலில், 62 புள்ளி 87 சதவீதம் வாக்குகள் பதிவானது.
ஜார்கண்ட் தேர்தல் - முதல்கட்ட வாக்குப்பதிவு
x
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக மொத்தம் 81 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், 6 மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 3 மணி வரை நடைபெற்றது. மொத்தம், மூவாயிரத்து 906 வாக்குச் சாவடிகளில் சுமார் 38 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், 62 புள்ளி 87 சதவீதம் வாக்குகள் பதிவானது.

Next Story

மேலும் செய்திகள்