மஹாராஷ்டிரா முதல்வர் ஆகிறார், உத்தவ் தாக்கரே

மஹாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா உறவு முறிந்து விட்டதால், புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.
மஹாராஷ்டிரா முதல்வர் ஆகிறார், உத்தவ் தாக்கரே
x
மஹாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா உறவு முறிந்து விட்டதால், புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. இதனால்,
சிவசேனா தலைமையில் புதிய ஆட்சி உருவாக்கும் பணி, முடுக்கி விடப்பட்டு உள்ளது. நடந்து முடிந்த தேர்தலில், மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு, 105 இடங்கள் மட்டுமே கிடைத்தது. கூட்டணி கட்சியான சிவசேனா, முதலமைச்சர் பதவி கேட்டு பிடிவாதம் பிடித்ததால், ஆட்சி அமைக்கும் முயற்சியில் இருந்து பாஜக பின் வாங்கியது. இதைத்தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் சிவசேனா, ஈடுபட்டு உள்ளது.
இன்னும் சற்று நேரத்தில், மஹாராஷ்டிரா ஆளுநர்
பகத்சிங் கோஷ்யரியை ,. சிவசேனா தலைவர்கள் சந்திக்க இருக்கிறார்கள். இதனிடையே, மஹாராஷ்டிராவில், முதலமைச்சர் பதவிக்கு உத்தவ் தாக்கரேவும், துணை முதலமைச்சர் பதவிக்கு அஜித் பவாரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என செய்தி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்