மகாராஷ்டிரா: ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு ஆளுநர் அழைப்பு

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வருமாறு பா.ஜ.க.விற்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா: ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு ஆளுநர் அழைப்பு
x
ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற சிவசேனாவின் பிடிவாதத்தால் கூட்டணியாக பெரும்பான்மை பெற்றும் பா.ஜ.க, சிவசேனா கூட்டணியால் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. மூன்று வாரங்களாக இழுபறி நீடித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து தற்போதைய இடைக்கால முதல்வரும் பாஜகவின் சட்டப்பேரவை கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ்சை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். 288 இடங்களை கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 105 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக பாஜக உள்ளதால் இந்த அழைப்பை ஆளுநர் விடுத்துள்ளார். மேலும் வரும் 11ஆம் தேதிக்குள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், பா.ஜ.க. இந்த அழைப்பை ஏற்குமா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.


Next Story

மேலும் செய்திகள்