சட்டப்பேரவை தேர்தல் : அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குபதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவை தேர்தல் : அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு
x
காங்கிரஸ் மூத்த தலைவர் சுஷில்குமார் ஷிண்டே, தனது குடும்பத்தினருடன் ஹரியானா மாநிலம் சோலாபூர் தொகுதியில் வாக்களித்தார். சுஷில்குமார் ஷிண்டேவின் மகள் பிரனிதி ஷிண்டே மத்திய  சோலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்தி நடிகர் அமீர்கான், பந்ரா மேற்கு தொகுதியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். முன்னாள் டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி, தனது மனைவி நடிகை லாரா தத்தாவுடன் வந்து வாக்களித்தார்.

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தனது குடும்பத்தினருடன் நாக்பூர் தொகுதியில் வாக்களித்தார். அதேபோல் ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  ஆகியோர் குடும்பத்துடன் வாக்களித்தனர். நடிகை ஜெனிலியா, தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் வந்து வாக்களித்தார். அதேபோல், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைகட்சி தலைவா் ராஜ் தாக்கரே தனது வாக்கை பதிவு செய்தார்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். அதேபோல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்,  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்தனர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கர், மும்பை பந்த்ரா தொகுதியில் வாக்களித்தார். அவருடைய மகன் அர்ஜூன், மனைவி அஞ்சலி ஆகியோரும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்தி நடிகர் கோவிந்தா, மும்பை அந்தேரி தொகுதியில்  தனது வாக்கை பதிவு செய்தார். அவருடைய மனைவி சுனிதாவும் அங்கு வாக்களித்தார்.

Next Story

மேலும் செய்திகள்