கொளத்தூரில் குளத்தை தூர்வாரும் பணியினை துவக்கி வைத்தார் ஸ்டாலின்

சென்னை கொளத்தூரில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் நடைபெற்ற பணிகளை திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
கொளத்தூரில் குளத்தை தூர்வாரும் பணியினை துவக்கி வைத்தார் ஸ்டாலின்
x
சென்னை கொளத்தூரில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் நடைபெற்ற பணிகளை திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திருவீதி அம்மன் தெருவில், மாநகராட்சி குளத்தை தூர்வாரும் பணி தொடங்கி உள்ளது. அந்த பணியினை,  திமுக  தலைவர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில்,  திமுக எம்பிக்கள் டி. ஆர். பாலு, கலாநிதி வீராசாமி மற்றும் திமுக எம்எல்ஏக்கள் ரங்கநாதன் மற்றும் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்