"கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்டதற்கு ஸ்டாலின் பாராட்டு"

"கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்களுக்கு எழுத்தறிவு"
கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்டதற்கு ஸ்டாலின் பாராட்டு
x
கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்டதற்காக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜனுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கீழடி ஆய்வறிக்கையின் மூலம் கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தது தெரியவந்துள்ளதாக ஸ்டாலின் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆய்வின் முடிவுகளால், தமிழர் நாகரிகம் "முற்பட்ட நாகரிகம்" என்றும், இந்திய வரலாற்றை இனி தமிழ்நாட்டிலிருந்து பார்க்க வேண்டும் என்றும் மீண்டும் உறுதியாகியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கீழடி அகழ்வாய்வில் கிடைத்த எலும்புத் துண்டுகளில் இருந்து 'திமிலுள்ள காளை'யின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது - வேளாண் தொழிலில் நாம் முதன்மைக் குடியாக இருந்ததையும்,

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்குரிய தொன்மையையும் எடுத்துக் காட்டுவதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். 

இனியாவது தமிழ்மொழி தொன்மையானது - அதற்கு அனைத்து நிலைகளிலும் முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணர்வார்கள் என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், 

கீழடியை பாதுகாப்பான இடமாக அறிவித்து சர்வதேச தரத்தில் அருங்காட்சியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழர் நாகரிகத்தின் தொன்மையைக் காப்பாற்ற மத்திய,மாநில அரசுகள் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்