புதுச்சேரி : எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்

புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
புதுச்சேரி : எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்
x
புதுச்சேரி சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டுக்கான எட்டாயிரத்து 425 கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, சபாநாயகர் சிவகொழுந்து மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில் அவர் சபையை நடத்தக் கூடாது என்றும், முதலமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மக்களை ஏமாற்றும் வெற்று பட்ஜெட் என்று குற்றம்சாட்டியும் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். இதையடுத்து பேரவையின் மாண்பை கெடுக்கும் வகையில் செயல்படும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் சிவகொழுந்து உத்தரவிட்டார். இதனையடுத்து எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வலுக்கட்டாயமாக  வெளியேற்றப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை வாசித்தார். வேளாண்துறை மூலம் இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் 100 சதவீதம் உயர்வு உள்பட பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார்.  முதலமைச்சர் பட்ஜெட் உரையை முடித்தவுடன் பேரவையை நாளைய தினத்திற்கு சபாநாயகர் சிவகொழுந்து ஒத்திவைத்தார்.  

Next Story

மேலும் செய்திகள்