கோவாவை தொடர்ந்து சிக்கிம் எதிர்க்கட்சி காலி : கூண்டோடு பா.ஜ.க.வில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஐக்கியம்

கோவாவை தொடர்ந்து சிக்கி​ம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.
கோவாவை தொடர்ந்து சிக்கிம் எதிர்க்கட்சி காலி : கூண்டோடு பா.ஜ.க.வில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஐக்கியம்
x
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமை சேர்ந்த சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியை சார்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பாரதிய ஜனதாவில் இணைந்தனர். டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின்  செயல் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பொறுப்பாளர் ராம்மாதவ் முன்னிலையில் தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டனர். இந்த இணைப்பின் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் கடைசி மற்றும் எட்டாவது மாநிலமான சிக்கிமிலும் பா.ஜ.க. கால் பதித்துள்ளது. அன்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் சிக்கிம் பிரதிகாரி கட்சி 17 இடங்களிலும், சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி 15 இடங்களிலும் வெற்றி பெற்றது. முதல்வராக சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சியை சார்ந்த பி எஸ் கோலாய் முதல்வராக பதவி வகித்து வருகிறார்.பா.ஜ.க. மொத்தம் உள்ள 32 இடங்களிலும் போட்டியிட்டாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மக்களவை தேர்தல் வெற்றிக்கு பிறகு பல்வேறு மாநிலங்களில் மாற்றுக் கட்சியை சார்ந்தவர்கள் தொடர்ந்து பா.ஜ.க.வில்  இணைந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தற்போது சிக்கிமின் மிக முக்கிய கட்சியாக இருக்கும் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் பா.ஜ.க. வில் ஐக்கியமாகி உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல பிரதேசம்,  மணிப்பூர் திரிபுரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. நாகலாந்து, மேகாலயா, மிசோரம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் பா.ஜ.க. கூட்டணி கட்சி ஆட்சி நடந்து  வருகிறது. 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது பா.ஜ.க.வில் இணைந்துள்ளது மூலம் சிக்கிமில் தாமரை மலர்ந்துள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்