ஜம்மு, காஷ்மீர் ஆளுநர் அழைப்பை ஏற்றார் ராகுல் காந்தி
பதிவு : ஆகஸ்ட் 13, 2019, 03:34 PM
டெல்லியில் உட்கார்ந்து கொண்டு கருத்து சொல்லக் கூடாது என்றும், நேரில் வந்து பார்த்துவிட்டு பேச வேண்டும் எனவும் ஜம்மு, காஷ்மீர் ஆளுநர், எதிர்க்கட்சித் தலைவர்களின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்திருந்தார்.
டெல்லியில் உட்கார்ந்து கொண்டு கருத்து சொல்லக் கூடாது என்றும், நேரில் வந்து பார்த்துவிட்டு பேச வேண்டும் எனவும் ஜம்மு, காஷ்மீர் ஆளுநர், எதிர்க்கட்சித் தலைவர்களின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்திருந்தார். ஜம்மு, காஷ்மீர் நிலை குறித்து அறிய தேவைப்பட்டால் விமான வசதி செய்து தருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவருக்கு பதில் அளித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியங்களை பார்க்க விடுத்த அழைப்பை தாமும் எதிர்க்கட்சித் தலைவர்களும் ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். தங்களுக்கு விமானம் நீங்கள் ஏற்பாடு செய்யத் தேவையில்லை என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மக்கள், பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அங்குள்ள ராணுவ வீரர்களை சந்தித்து சுதந்திரமாக பேச பயணிக்க அனுமதித்தால் மட்டும் போதும் என ஜம்மு, காஷ்மீர் ஆளுநருக்கு, ராகுல் காந்தி பதிலடி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2268 views

பிற செய்திகள்

வருமான வரி திருத்த சட்டம் - அறிக்கை சமர்பித்தது நிபுணர் குழு

வருமானவரி சட்டத்தை மாற்றியமைப்பதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழு அதன் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் தாக்கல் செய்தது,

10 views

அமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

அமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடியுடன் , ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தொலைபேசியில் 30 நிமிடம் பேசியதாக, கூறப்படுகிறது.

15 views

உன்னாவ் பாலியல் வழக்கு : சிபிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண், பாலியல் வன்கொடுமைக்குள்ளான நிலையில், அவரது குடும்பத்தை விபத்து ஏற்படுத்தி கொலை செய்ய முயன்ற விவகாரம் தொடர்பான வழக்கு சிபிஐ வசம் உள்ளது.

22 views

"பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி. வரி வேண்டும்" : மேற்குவங்கத்தில் லாரிகள் வேலை நிறுத்தம்

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர கோரி, மேற்குவங்கத்தில், லாரி உரிமையாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ​தொடங்கியுள்ளனர்.

225 views

எம்பி ஆனார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

70 views

"பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகந்நாத் மிஸ்ரா மறைவுக்கு 3 நாள் துக்கம் அனுசரிப்பு" - பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவிப்பு

பீகார் முன்னாள் முதலமைச்சரான ஜெகன்நாத் மிஸ்ராவின் மறைவை ஒட்டி, மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.