ரயில்வே துறை மானிய கோரிக்கை : மக்களவையில் நள்ளிரவு வரை நீடித்த விவாதம்

மக்களவையில், ரயில்வே துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நள்ளிரவு வரை நீடித்தது.
ரயில்வே துறை மானிய கோரிக்கை : மக்களவையில் நள்ளிரவு வரை நீடித்த விவாதம்
x
ரயில்வே துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் 2019 -2020 ஆம் ஆண்டுக்கான ரயில்வே துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் மக்களவையில் நேற்று  நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. அப்போது பேசிய காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க விமான போக்குவரத்துறை அமைச்சர் விரும்புவதாகவும், ரயில்வே சொத்துக்களை 
விற்க அத்துறை அமைச்சர் பியூஷ் கோயல்  விரும்புவதாகவும் குற்றம் சாட்டினார். ரயில்வே துறை தனியார் மயமாக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே கேட்டுகொண்டார். புல்லட் ரயில் திட்டமெல்லாம் இந்தியாவுக்கு ஒத்து வராது என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்யோபாத்யாயா கூறினார். மத்திய பட்ஜெட்டுடன் ரயில்வே ப்ட்ஜெட்டை இணைத்ததால் எந்த பலனும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். முன்னதாக பேசிய திமுக எம்.பி. கனிமொழி, ரயில்வேத்துறையில் மனித கழிவுகளை சுத்தப்படுத்த மனிதர்களை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். ஒப்பந்ததாரர்கள் மூலம் இச்செயல் நடைபெறுவதாகவும், இது தேசத்திற்கே வெட்க கேடு என்றும் கனிமொழி குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்