கர்நாடகத்தில் ஆட்சி கவிழும் சூழல் : முதலமைச்சர் குமாரசாமி அவசர ஆலோசனை

கர்நாடகத்தில் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளதால் முதலமைச்சர் குமாரசாமி எம்.எல்.ஏக்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
கர்நாடகத்தில் ஆட்சி கவிழும் சூழல் : முதலமைச்சர் குமாரசாமி அவசர ஆலோசனை
x
கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 10 பேர், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் 3 பேர் என மொத்தம் 13 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை குமாரசாமி தலைமையிலான அரசு இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. ராஜினாமாவை சபாநாயகர் இன்னும் ஏற்காத நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பைக்கு சென்று சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தமது அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று மாலை பெங்களூரு திரும்பினார். தாஜ் ஹோட்டலில் தேவகவுடா, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் ஆகியோருடன் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்