இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

2019-2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.
இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்
x
2019-2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட் இருக்கும் என கூறப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 303 இடங்களுக்கும் அதிகமாக பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன், முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் அடுத்த 5 ஆண்டுக்கான செயல் திட்டம் இந்த பட்ஜெட் மூலம் தெரியவரும் நிலையில், 2019-2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அனைத்து தரப்பினராலும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் தொழில்களை ஊக்குவிக்கும் வகையிலும், வரிசெலுத்துவோரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் பல்வேறு திடமான அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. தேக்க நிலையில் உள்ள பொருளாதார வளர்ச்சி விகிதம் மற்றும் வரி வருவாய் குறைவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நீண்ட கால அடிப்படையில், சீர்திருத்தங்கள் முன்பை விட மிகவும் உத்வேகத்தில் எடுத்துச் செல்வதற்கு ஏற்ப பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்