நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்
நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
x
மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நடப்பு நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில், நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 5 ஆண்டுகாலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 7.5 சதவீதமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய 2017-18ஆம் நிதியாண்டில் 6.4 சதவீதமாக இருந்த நிதி பற்றாக்குறை, கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் 5.8 சதவீதமாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்