வாக்குப் பதிவை நேர்மையாக நடத்துங்கள் - தேர்தல் ஆணையத்துக்கு மம்தா கடிதம்

மேற்கு வங்கத்தில் இன்று நடைபெறும் தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
வாக்குப் பதிவை நேர்மையாக நடத்துங்கள் - தேர்தல் ஆணையத்துக்கு மம்தா கடிதம்
x
மேற்கு வங்கத்தில் இன்று நடைபெறும் தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.  இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பா.ஜ.க. வின் தலையீடு இல்லாமல் தேர்தல் நடைபெறுவதை தோ்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.  நாட்டின் கூட்டாட்சி அமைப்பையும், ஜனநாயக நிறுவனங்களையும் தோ்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்