ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. கூட மாற்று கட்சிக்கு போக மாட்டார் - கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா

மே 23ஆம் தேதிக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் அணி மாறுவார்கள் என பா.ஜ.க.வும் காங்கிரஸும் கூறிவருவதால் கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. கூட மாற்று கட்சிக்கு போக மாட்டார் - கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா
x
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி தொடரும் என்றார். பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் யாரையும் காங்கிரஸ் கட்சி இழுக்காது என்றும், மே 23 ஆம் தேதிக்கு பின்னர், அவர்களாகவே காங்கிரஸ் கட்சிக்கு வருவார்கள் என்றும் வேணுகோபால் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக முன்னாள் பா.ஜ.க. முதலமைச்சர் எடியூரப்பாவிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட, மாற்றுக் கட்சிகளுக்கு செல்ல மாட்டார்கள் என தெரிவித்தார். அதேநேரத்தில் குமாரசாமி மீது அதிருப்தியில் உள்ள 20 -க்கும் மேற்பட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த கட்சியில் நீடிக்க மாட்டார்கள் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்