ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் - வைகோ

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிடாவிட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் - வைகோ
x
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தின் உயிர் ஆதாரமாக விளங்கும்  காவிரி படுகை மாவட்டங்களில் வேளாண் தொழிலை முற்றிலும் அழித்து ஒழித்து விட்டு, லட்சக்கணக்கான மக்களை அகதிகளாக புலம் பெயரச் செய்ய மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி அரசுகள் சதி திட்டம் தீட்டி செயல்படுத்த முடிவு செய்து உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். காவிரி பாசனப் பகுதி மக்களை சோற்றுக்கு கை ஏந்தும் நிலைக்குத் தள்ளிவிட மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயு போன்ற நாசகாரத் திட்டங்களைச் செயல்படுத்த மோடி அரசு தீவிரமாக முனைந்துள்ளதாக, வைகோ குறிப்பிட்டுள்ளார். இதனை எதிர்க்காத எடப்பாடி அரசு காவிரி டெல்டா மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் துரோகம் இழைத்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்