ராகுல்காந்தி வேட்பு மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு : சுயேட்சை வேட்பாளர் எதிர்ப்பை அடுத்து நடவடிக்கை

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேட்பு மனு மீதான பரிசீலனையை, வரும் 22ம் தேதி திங்கள் கிழமைக்கு, அந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம் மனோகர் மிஸ்ரா ஒத்தி வைத்துள்ளார்.
ராகுல்காந்தி வேட்பு மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு : சுயேட்சை வேட்பாளர் எதிர்ப்பை அடுத்து நடவடிக்கை
x
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேட்பு மனு மீதான பரிசீலனையை, வரும் 22ம் தேதி திங்கள் கிழமைக்கு, அந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம் மனோகர் மிஸ்ரா ஒத்தி வைத்துள்ளார். சுயேட்சை வேட்பாளர் துருவ் லால் அளித்த புகாரில், ராகுல்காந்தி வேட்பு மனுவில் சில முக்கிய தகவல்கள் முறையாக இல்லை என குற்றம்சாட்டி உள்ளார். இங்கிலாந்து குடியுரிமை, இங்கிலாந்தில் நிறுவனம் நடத்தியது மற்றும் 2003 மற்றும் 2009 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட கால சொத்து விவரம், கல்வித் தகுதி மற்றும் பெயர் தொடர்பாக ராகுல் காந்தியின் வேட்பு மனுவில் முறையான தகவல்கள் இல்லை என அதில் சுட்டிக்காட்டி உள்ளார். இதையடுத்து, வேட்புமனு பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்